Comprehensive Welfare Programs முழுமையான சமூக நலத் திட்டங்கள்

Holistic Care, Education & Women's Empowerment ஆதரவற்ற பெண்களுக்கான பாதுகாப்பு, கல்வி & வாழ்வுரிமை

Six dedicated welfare wings designed to protect vulnerable orphan girls, educate them up to professional degrees, and support destitute widows with dignity and economic self-sufficiency. ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு குடும்ப பாசத்துடன் இல்லம், பட்டப் படிப்பு வரையிலான கல்வி, கைவிடப்பட்ட பெண்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் விதவைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ஆகிய 6 முக்கிய நலப் பிரிவுகள்.

Official Trust Identity & Core Wings அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிமுகம்

Rahmath Pengal Nala Etheemkana Matharsa is a registered charitable trust organization functioning in Thevaram, Theni District, Tamil Nadu. This trust is actively providing education, shelter, and full care for girls and poor orphan (Yatheem) children. ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா (Rahmath Pengal Nala Etheemkana Matharsa) என்பது தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் இயங்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு மற்றும் அறக்கட்டளை நிறுவனமாகும். இந்த அறக்கட்டளை பெண்கள் மற்றும் ஏழை/எதிம் (அதைச் சார்ந்த) குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

Location இடம்
Thevaram, Theni District, Tamil Nadu தேவாரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு
Pennikuyik Nagar, Near Sub-Registrar Office - 625 530
Founder / Leadership நிறுவனர் / தலைமை
Rejina Fathima (Aalima) ரெஜினா பாத்திமா (ஆலிமா)
Founder & Managing Trustee
Activities செயல்பாடுகள்
Women Welfare, Madrasa, Orphanage பெண்கள் நலன், மதக் கல்வி & எத்தீம்கானா
6 Active Welfare Wings Under One Roof
Wing 01 • Orphanage Home பிரிவு 01 • எத்தீம்கானா காப்பகம்

Residential Boarding & Maternal Orphan Care தாயன்புடன் கூடிய எத்தீம்கானா உறைவிடக் காப்பகம்

Our Etheemkana currently houses 90+ orphan girls. Rather than running an impersonal institution, we run a genuine loving home. Sisters and wardens live alongside the children, ensuring every girl receives emotional affection, safety, hygiene, moral guidance, and personal attention. எங்கள் எத்தீம்கானாவில் தற்போது 90-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற எத்தீம் பெண் பிள்ளைகள் தங்கிப் பயில்கின்றனர். இது வெறும் காப்பகம் மட்டுமல்ல; குடும்ப பாசத்துடன் கூடிய இல்லமாகும். ஆலிமா ரெஜினா பாத்திமா அவர்களும் காப்பாளர்களும் இக்குழந்தைகளுடன் தங்கி தாய் போன்ற அரவணைப்பை தருகின்றனர்.

  • ✔ Wholesome Daily Nutrition: சத்தான 3 வேளை உணவு: 3 freshly prepared meals daily tailored to growth and health. காலை, மதியம், இரவு என தினமும் மூன்று வேளையும் சத்தான, தரமான உணவு வழங்கப்படுகிறது.
  • ✔ Clothing & Seasonal Needs: உடை & பண்டிகை ஆடைகள்: Complete school uniforms, daily modest dresses, and new festive Eid attire. பள்ளி சீருடைகள், தினசரி ஆடைகள் மற்றும் ரமலான், பக்ரீத் பெருநாட்களுக்கான புத்தாடைகள்.
  • ✔ Healthcare & Medical Care: மருத்துவ பரிசோதனை & சிகிச்சை: Regular wellness checkups and 100% covered hospital care. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அவசர சிகிச்சை செலவுகள் அறக்கட்டளையால் ஏற்கப்படுகிறது.
Sponsor an Orphan's Living Needs மாணவிக்கு உணவு & பராமரிப்பு ஸ்பான்சர் செய்ய
Children in classroom and boarding
Vocational and Madrasa Learning
Wing 02 • Dual Education பிரிவு 02 • மார்க்க & உலகக் கல்வி

Balanced Education: Schooling + Quranic Madrasa இருலோக கல்வி: அரசுப் பள்ளி & மத்ரஸா மார்க்கக் கல்வி

We strongly believe that education must enlighten both mind and soul. Our girls attend accredited secular schools while benefiting from our in-house Dar Al-Aytam Lilbanat Wa Madrasat-ul-Quran curriculum. கல்வி அறிவையும் ஆன்மாவையும் ஒளிபெறச் செய்ய வேண்டும். எமது மாணவிகள் அரசுப் பள்ளிகளில் பயில்வதோடு, மாலையிலும் காலையிலும் எமது மத்ரஸா மூலம் புனித குர்ஆன் மற்றும் மார்க்க சட்டங்களை ஆழமாகக் கற்கின்றனர்.

  • ✔ Madrasat-ul-Quran: மத்ரஸதுல் குர்ஆன்: Tajweed, Quran memorization, and Islamic moral character development. தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதுதல், ஹிஃப்ழு மற்றும் இஸ்லாமிய ஒழுக்கப் பண்புகள்.
  • ✔ Public Speech Training: மார்க்க உரை & சொற்பொழிவு பயிற்சி: Mentoring students to become confident, articulate community leaders. மாணவிகள் மேடைகளில் தன்னம்பிக்கையுடன் மார்க்க உரையாற்ற சிறப்புப் பயிற்சி.
  • ✔ Higher Studies & NEET Support: உயர்கல்வி & போட்டித் தேர்வு வழிகாட்டுதல்: Specialized subject coaching enabling degree admissions in Pharmacy, Engineering & Nursing. கல்லூரி சேர்க்கை மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டுதல்.
View Higher Education Total Expenses → உயர்கல்வி மொத்தச் செலவு விவரம் →
Wing 03 • Vocational Training பிரிவு 03 • இலவச தொழிற்கல்வி மையம்

Free Tailoring, Typewriting & Computer Center இலவச தையல், தட்டச்சு & கணினி பயிற்சி மையம்

Empowering teenage orphan girls and destitute village widows with practical skills that guarantee immediate income generation and financial dignity. மாணவிகள் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பையும் பொருளாதார தன்னிறைவையும் உருவாக்கும் இலவச தொழிற்பயிற்சிகள்.

Free Tailoring Training இலவச தையல் பயிற்சி

Modern sewing machines. Women learn cutting, stitching, and embroidery to take orders and earn from home. நவீன தையல் இயந்திரங்களுடன் துணி வெட்டுதல், தைத்தல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சிகள் அளிக்கப்பட்டு சுயதொழில் தொடங்க உதவுகிறோம்.

Computer Literacy Lab கணினி பயிற்சி மையம்

Teaching MS Office, digital literacy, and Internet navigation for modern office careers. அடிப்படை கணினி அறிவு, எம்.எஸ் ஆபிஸ் மற்றும் இணைய பயன்பாட்டுப் பயிற்சிகள் மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.

Typewriting Training தட்டச்சு (Typewriting) பயிற்சி

Tamil and English government examination preparation opening pathways for clerical jobs. தமிழ் மற்றும் ஆங்கில அரசு தட்டச்சு தேர்வுக்கான முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

Wing 04 • Widows Aid பிரிவு 04 • ஆதரவற்றோர் பென்ஷன்

Widows & Destitute Women Pension Program விதவை & ஆதரவற்ற பெண்கள் மாதாந்திர உதவித்தொகை

Over 20+ abandoned wives, elderly widows, bedridden patients, and differently-abled sisters receive monthly financial pensions from the trust, alongside schooling support for their children. 20-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட பெண்கள், வயதான விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அறக்கட்டளை மூலம் மாதாந்திர வாழ்வாதார உதவித்தொகையும், அவர்களின் குழந்தைகளின் பள்ளி கட்டணங்களும் வழங்கப்படுகின்றன.

Sponsor a Widow's Monthly Pension விதவை பெண்களுக்கு உதவி வழங்க
Wing 05 & 06 • Marriage & Eid Relief பிரிவு 05 & 06 • திருமண உதவி & நிவாரணம்

Marriage Assistance & Festive Relief எத்தீம் பெண் திருமண உதவி & பண்டிகை நிவாரணம்

50+ Blessed Marriages: We have funded the dignified weddings of over 50 orphan daughters with bridal clothes and home essentials. On Eid, we distribute Fitra rice and meat across hundreds of impoverished families. 50-க்கும் மேற்பட்ட நிக்காஹ்: ஆதரவற்ற 50-க்கும் மேற்பட்ட எத்தீம் பெண் பிள்ளைகளுக்கு திருமண ஆடைகள், சீர்வரிசை மற்றும் நிக்காஹ் செலவுகளை அறக்கட்டளை முழுமையாக ஏற்று நடத்தியுள்ளது. மேலும் பெருநாட்களில் ஃபித்ரா அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

Support Marriage / Relief Fund திருமண உதவி நிதிக்கு பங்களிக்க
Community Welfare & Outreach பிற சமூக நலப் பணிகள்

Other Social Functions & Outreach பிற சமூக நற்பணிகள் & விழாக்கள்

Beyond our orphanage walls, the Trust actively organizes public health, cultural harmony, and community awareness initiatives. ஆதரவற்றோர் காப்பகப் பணிகளுடன் இணைந்து, பொது மக்கள் நலம், உடல்நலம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.